நம்மை உலுக்கி கொண்டிருக்கும்
கவலைகளும்
காயங்களையும்
நாமாகவே நிறுத்தும் வரை
நிம்மதி கிடைக்காது....
அன்புள்ள என் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு..
அதிகாலை மணி 5.30
இருக்கும்… எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.. 36 வருடங்களுக்கு முன் மறைந்த என் தந்தை..
ஏழு வயதான என் விரல் பிடித்து.. பேருந்துக்காக காத்திருந்த தருணங்கள் அவை.. அன்று மட்டும்
என் தாய் தந்தை தமிழ்ப்பள்ளியே எங்கள் தேர்வென்ற மிகச்சரியானதொரு முடிவை எடுக்காமல்
இருந்திருந்தால், இன்று நானும் ஒரு தமிழ்ப்பள்ளி பட்டதாரி ஆசிரியை ஆகி இருப்பேனா என்று
தெரியவில்லை.. நான் மட்டுமல்லாமல் என் அண்ணன்,
அக்காள் மற்றும் எங்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறை வாரிசுகளும் வருங்கால பட்டதாரிகளாக
வளர்ந்து விட்டார்கள்..
இத்தருணத்தில்.. எனக்குத்
தாய்ப்பால் ஊட்டியதோடு தமிழ்ப்பாலையும் சேர்த்து ஊட்டிய தாய்க்கு முதல் வணக்கம். மாதா
பிதா குரு தெய்வம் என்பது பொய்யா மொழியாகும்… அனைவர் வாழ்விழும் ஆரம்பம் என்பது கரடு
முரடானதாக இருக்கலாம்.. அன்றைய காலங்களில் நம் இனத்தாரின் குறைவிலா செல்வம் ஏழ்மையும்
வறுமையும் ஆகும்… அப்படியிருந்தும் கல்வி எனும் அரிய செல்வம் அடிப்படைக் குறையின்றி
எனக்குக் கிடைக்க அரிய தியாகங்களைச் சிந்திய என் உடன் பிறப்புகளும் இங்கு குறிப்பிட
தக்கவறே..
அன்றெல்லாம் பாலர்
பள்ளிகளோ.. குழந்தைகள் காப்பகமோ கிடையாது… ஆரம்ப்பள்ளியே அனைத்தும்.. எல்லாமும் ஆகிய
என் அன்புக்குரிய அந்த ஆரம்பப்பள்ளி மலாக்கா புக்கிட் காஜாங் ஆகும்… இன்றும் கம்பீரம்
கலையாமல்.. வெற்றிகளைக் குவிப்பதில் குறைவில்லாமல் நிலைத்திருக்கிறது…
மே 16… ஆசிரியர் தினம்….
என்னை அரவணைத்து, கல்வியின் வாசம் நுகரச் செய்து, வாழ்வில் நல்ல நிலைக்குக் கொண்டு
வந்த அந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் இன்றும் என் நினைவில் பசுமரத்தாணிப் போல்
பதிந்துள்ளனர்… அன்பான பொறுப்பான தலைமமையாசிரியை திருமதி கனகாம்பரம் குறிப்பிடத் தக்கவர்..
இவரின் தலைமைத்துவத்தின் கீழ் அந்த பள்ளியில் முதலாம் ஆண்டு கால் பதித்தேன்.. இன்று
நானும் ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன்.. நினைவலைகளை 33 ஆண்டுகள் சற்று
பின்னோக்கிப் பார்கிறேன்..
முதலாம் ஆண்டு வகுப்பாசிரியை
திருமதி சாந்தி.. இப்பொழுது செர்க்கம் தோட்டத் தமிழ்ப்பள்ளி தலையமையாசிரியை.. 33 ஆண்டுகள்
ஆகியும் தோற்றத்திலும் திறமையிலும் சிறிதும் மாற்றம் இல்லை.. இன்று என் கையெழுத்து
வடிவத்திற்கான முதல் காரணம் சாந்தி ஆசிரியை. அவரின் காலம் தவறாமை, பொறுப்புணர்ச்சி,
கடமையுணர்வு அனைத்தும் இன்றும் என் கண் முன்னே எனக்கு வழிகாட்டியாக வருகிறது. பாடத்
துணைப் பொருள்களில் அவருடைய முத்து முத்தான
கையெழுத்துகள் மறக்க முடியாதவை. அவர் கூறிய நன்னெறிக் கதைகளும் பாடல்களும் என்றும்
பசுமையானவை. நன்றி ஆசிரியை..
அன்பான மலாய் மொழி
ஆசிரியை திருமதி.கமலாதேவி.. மறக்க முடியுமா? என்றும் மனதில் நிலையாக இருக்கும் ஆசிரியர்களில்
குறிப்பிடத் தக்கவர்… அழகழகாய் உடையணிந்து வருவார்.. புன்னகை பூ முகம் குறையாமல் சிரித்தே
காட்சியளிப்பார்.. மலாய் மொழி பாடத்தை மாணவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் அதிகம் சிரத்தை
எடுத்துக் கொள்வார்.. அதனால் தான் என்னவோ இன்று நானும் ஒரு வகையில் மலாய் மொழியில்
சிறந்து விளங்குகிறேன்… கடந்த 10 ஆண்டுகளாக யு.பி.ஸ்.ஆர் தேர்வுக்கும் பிற வகுப்புகளுக்கும்
தவறாமல் மலாய் மொழி போதிக்கிறேன். Terima kasih cikgu..
அன்பிற்குரிய ஆரம்பப்பள்ளி
ஆசிரியர்களில் மேலும் குறிப்பிடத் தக்கவர் சுமார் மூன்று ஆண்டுகள் வகுப்பாசிரியராக
எங்களைப் பெற்ற பிள்ளைகள் போல் பார்த்து, பாடம் போதித்து, நல்வழி காட்டிய ஆசிரியை திருமதி.
சரோஜா அவர்கள். தாய்மொழியின் மேல் தீரா தாகம் கொள்ள முழு காரணம் ஆவார். பாழாய்ப் போன
ஆஸ்துமாவினால் அவதியுற்றாலும் எங்களுக்கு குறைவிலா தமிழ் மொழிக் கல்வியைப் போதித்திடுவார்..
சரோஜா என்ற என் தாயின் பெயரைக் கொண்ட இவர் என்றும் என் நன்றிற்கு உரியவர்..
இவர்கள் வரிசையில்
கடந்த ஆண்டு மரண பகவானின் வாசலுக்குச் சென்று விட்ட, நான் நேசித்த சேவியர் ஆசிரியரும்
குறிப்பிடத் தக்கவரே.. மலாக்கா கூபு தமிழ்ப்பள்ளி இவரின் கால் சுவடுகளை அதிகம் பதிவாக்கியிருக்கும்
என்று நம்புகிறேன்.. ஆரம்பப்பள்ளியில் நன்னெறி பாடத்தின் வேளைகளில், காலை வெட்டி நாயிக்குப்
போட்டிடுவேன் என்ற அவரின் நகைச்சுவை உணர்வான பேச்சுகளை என்றும் மறக்க முடியாது.. அன்னாரின்
ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்..
மாணவர்களின் வாழ்க்கை
சூழல் அறிந்து.. மனநிலை உணர்ந்து, குடும்ப பிண்ணனி தெரிந்து எதிர்காலத்தைக் கருத்தில்
கொண்டு செயல்படுபவர்களே ஆசிரியர்கள். அந்த வகையில் எங்களை வழிநடத்தி, எங்களின் ஒவ்வொரு
கால்தடத்திலும் சிறந்த எதிர்காலம் பற்றிய சிந்தனைகளைச் செதுக்கி, நல்வாழ்க்கை உருவாகிட
விதை விதைத்தவர்கள் நான் மேற்கூறியவர்களைப் போல் இன்னும் பலர்…காலத்தின் மாற்றங்களால்
வாழ்க்கையின் துரத்தல்களில் முட்டி மோதி நாங்கள் எவ்வளவோ தூரங்கள் பயணப்பட்டு வந்து
விட்டாலும், இன்றும் எங்களை விரல் பிடித்து வழிநடத்திய ஆசிரியர்கள் அனைவருமே என்றென்றும்
எங்கள் நன்றிக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள் தான். இத்தருணத்தில்.. உலகில் உள்ள
அனைத்து ஆசிரியர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி மலர்களைச் சமர்பிக்கின்றேன்.. அனைவருக்கும்
இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்..
நன்றியுடன்…
திருமதி.ஆ.ராஜம் இளங்கோவன் தாமான்
துன் அமீனா தமிழ்ப்பள்ளி, ஜோகூர்

நம்மை உலுக்கி கொண்டிருக்கும் கவலைகளும் காயங்களையும் நாமாகவே நிறுத்தும் வரை நிம்மதி கிடைக்காது....